viru

Advertisment

“நாளை ஜூலை 15, காமராஜருக்கு 116-வது பிறந்தநாள். விருதுநகர் அவர் பிறந்த ஊருல்ல.. இன்னைக்கு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விருதுநகருக்கு வந்து கனவு ஆசிரியர் விருது, புதுமைப்பள்ளி விருதெல்லாம் கொடுத்திருக்காரு. நாளைக்கு நாடார் மகாஜனசங்கம் இங்கே கல்வித்திருவிழா நடத்துது. முதலமைச்சர் எடப்பாடி வர்றாரு. முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், காந்தி பேரவை நிறுவனர் குமரி அனந்தன், பழ.நெடுமாறன் போன்றவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதெல்லாம் தரப்போறாங்க. ஆனா.. இன்னைக்கு..” என்று இழுத்த அந்த அதிமுக நிர்வாகி “முதலமைச்சர் வர்ற நேரத்துலயா இந்த மாவட்டத்துல வெட்டுக்குத்தெல்லாம் நடக்கணும்?” என்று வேதனைப்பட்டார்.

வெட்டுப்பட்டது யார்?

ஸ்ரீவில்லிபுத்தூர் – மம்சாபுரத்தை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில், விதிமீறலாக மணல் அள்ளுவதெல்லாம் சர்வசாதாரணமாக நடப்பதுதான். இந்த வேலையை கடந்த சில வருடங்களாக மிரட்டலாக செய்து வருகிறார் அய்யனார். இவர், மம்சாபுரம் அதிமுக நகர செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், முன்னாள் அரசு உதவி வழக்கறிஞரும் ஆவார். இன்னொரு வழக்கறிஞரான கணபதி, கோர்ட் நடவடிக்கைகளில் அய்யனாருக்கு உதவினார். ஒருகட்டத்தில் இருவருக்கும் பிடிக்காமல் போனது. டிடிவி தினகரனின் அமமுக பக்கம் சென்றார் கணபதி. இந்தநிலையில், மணல் திருட்டில் இருதரப்பினரும் போட்டாபோட்டி போட்டார்கள். அடித்துக் கொண்டார்கள் இதனால் விரோதம் வளர்ந்தது.

vett

Advertisment

இன்று மலையடிவாரத்தில் அய்யனார் ஆட்கள் மணல் அள்ளியபோது, கணபதி தரப்பினர் வீடியோ எடுத்திருக்கின்றனர். அப்போது அய்யனார் அங்கு வர, மூன்றுபேர் கொண்ட கும்பல், அவரை அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பி ஓடியது. தலையில் வெட்டுப்பட்ட அய்யனாரை உடனே ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விருதுநகர் மாவட்ட காவல்துறையின் உயர் அதிகாரிக்கு, மாவட்டம் முழுவதும் மணல் அள்ளுபவர்களிடமிருந்து மாமூல் போய்விடுகிறது. வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை என அனைத்து அரசுத்துறையினரும் அய்யனார் செய்துவரும் மணல் திருட்டுக்கு துணை போயிருக்கின்றனர்.

eda

Advertisment

விருதுநகர் மாவட்டத்தில், அரசு இயந்திரம் இந்த அளவுக்கு துருப்பிடித்துப் போயிருக்கும் நிலையில்தான், கல்வித்திருவிழாவில் கலந்துகொள்ள நாளை விருதுநகர் வருகிறார் முதல்வர். இந்தநேரத்தில், ஆளும்கட்சி ந.செ. வெட்டுப்பட்டது, எடப்பாடியை டென்ஷன் ஆக்கியிருக்கிறது.