Advertisment

ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு; பாதுகாக்க முயன்ற பள்ளி மாணவர்கள் காயம்

Cut the scythe to the teacher; School students who tried to protect were injured

Advertisment

சொத்து தகராறு காரணமாக பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த அரிவாள் வெட்டு தாக்குதலில் ஆசிரியர் உட்பட மாணவர்கள் காயமடைந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடராஜன் என்பவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் நுழைந்த நபர் ஒருவர் ஆசிரியர் நடராஜன் மீது அரிவாளைக்கொண்டு தாக்கமுயன்றார். இதனைப் பார்த்த பள்ளி மாணவர்கள் அந்த நபரைத்தடுக்க முயன்றனர். இந்த சம்பவத்தில் ஆசிரியர் நடராஜன் மற்றும் மூன்று மாணவர்களுக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், சொத்து தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

police villupuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe