bkk

திருவாரூர் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளால் தாக்கி ரூ5 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர். பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா சேங்காலிபுரத்தை ராமசாமி மகன் கர்ணன்(47). இவர் குடவாசல் தாலுக்கா எரவாஞ்சேரியில் அரசு மதுபான கடையில் மேறபார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

Advertisment

மதுபான விற்பனை பணத்தை நன்னிலம் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்துவது வழக்கம். கடந்த இரண்டு தினங்கள் கடையில் மதுபானங்கள் விற்பனைசெய்யப்பட்ட ரூ5 லட்சத்தை எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சீகார்பாளையம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் கர்ணனை வழி மறித்து அரிவாளை காட்டி பணத்தை கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர்.

ஆனால் கர்ணன் பணத்தை கொடுக்க மறுத்ததால் மர்ம நபர்கள் அரிவாளை கொண்டு கர்ணனின் இடது காதை வெட்டி அவரிடமிருந்த ரூ5 லட்சத்தை பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த கர்ணன் நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இச்சம்பவம் குறித்து நன்னிலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பளர் விக்கரமன் மருத்துவமனைக்கு நோில் சென்று நடைபெற்ற சம்பவ குறித்து கர்ணனிடம் விசாரணை மேற்கொண்டார். பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.