Published on 01/07/2022 | Edited on 01/07/2022

பட்டா கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி ரவுடிகள், இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ காட்சிகள் அவ்வப்போது வெளியாகிய அவர்கள் கைது செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தின் சீட்டில் கேக்கை வைத்து பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிட்லபாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட அஸ்தினாபுரம் அர்ஜுனன் காலனியில் வசித்து வரும் அஜய் என்ற இளைஞன் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் கொண்டாடியுள்ளான். அப்பொழுது அவனது சக நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளான். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவிய நிலையில், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த இளைஞனை தேடி வருகின்றனர்.