Advertisment

அமைச்சர் கோரிக்கைக்கு பின் அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு!

toll plazas

Advertisment

சென்னை புறநகரில் உள்ள வானகரம், சூரபட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வானகரம், சூரபட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் 10 ரூபாயில் தொடங்கி 40 ரூபாய் வரை சுங்க கட்டணத்தை உயர்த்தி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்த நிலையில் தமிழக அரசும் மத்திய அரசிடம் குறிப்பிட்ட அந்த இரண்டு சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

இந்த மாதம் 17 ஆம் தேதி டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சந்தித்து பேசிய நிலையில் அடுத்த நாளான 18 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது, ''பரனூர் டோல் கேட், சென்னசமுத்திரம், வானகரம், சூரபட்டு, நெமிலி இப்படி இந்த ஐந்து டோல் கேட்டுகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறேன்'' எனக் கூறியிருந்தார். இந்நிலையில் அகற்றவேண்டும் என அமைச்சர் கோரிக்கை வைத்த டோல் கேட்டிலேயே மத்திய அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe