Customs duty hike in Tamil Nadu!

Advertisment

தமிழ்நாட்டில் திருச்சி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் சுங்கக் கட்டண உயர்வு இன்று (02.09.2021) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

அதன்படி, விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் ரூபாய் 5 முதல் ரூபாய் 35 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஒருமுறை செல்லும் இலகுரக வாகனத்திற்கு ரூபாய் 50 வசூலித்த நிலையில், தற்போது ரூபாய் 55 கட்டணமாக வசூலிக்கப்பட்டுவருகிறது. ஒரேநாளில் பலமுறை செல்லும் இலகுரக வாகனத்திற்கு ரூபாய் 80 சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி சுங்கச் சாவடி உள்ளிட்ட சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிப்பு காரணமாக, வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சுங்கக் கட்டணத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.