The customer who carried out the attack for ten rupees

Advertisment

கோவை வெள்ளலூர் பகுதியில் பெட்டிக்கடை நடத்திவருபவர் செந்தில்குமார். இவர் கடை அருகே குடியிருந்துவரும் ஆகாஷ் என்பவர், மது போதையில் வந்து பத்து ரூபாய் சிகரெட் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் போனதால், செந்தில்குமார் அவரை சத்தம் போட்டு காசு கொடுத்துவிட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார். இதில் கோபமடைந்த ஆகாஷ், 10 நிமிடம் கழித்து மது பாட்டிலை உடைத்து செந்தில்குமாரை தாக்கியுள்ளார்.

இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரைப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். காயமடைந்த செந்தில்குமாரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் ஆகாஷ்க்கும் காயம் உள்ளதால், அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பத்து ரூபாய் சிகரெட்டிற்காக மதுபோதையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.