கோயம்பேடு மார்கெட்டிற்கு வெளியே நடைபாதை வியாபாரிகள் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி வியாபாரம் செய்வதற்கு சிஎம்டிஏ அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர். அதே போல் கடைகளை அகற்றி மாற்று இடத்தில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இதனால் நேற்று (30.08.2021) முதல் வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் கூறிய இடத்தில் சேரும் சகதியுமாக உள்ளதாகவும், கூட்டம் வராத இடம் என்பதால் வியாபாரம் ஆகாமல் போய்விடும் என்றும் குற்றச்சாட்டினர். மேலும் அவர்களை இத்தனை நாட்களாக வியாபாரம் செய்த இடத்திலேயே அனுமதிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/cmbt-mrkt-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/cmbt-mrkt-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/cmbt-mrkt-3.jpg)