Curry Festival for Men Only!

மதுரையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழாவில் 60- க்கும் அதிகமான ஆடுகளைப் பலியிட்டு பரிமாறப்பட்டது.

Advertisment

60 ஆடுகளை வெட்டி ஒரே இடத்தில் படையலிட்டுக் கொண்டாடியுள்ளனர் 10- க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஆண்கள். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள அனுப்பபட்டியில் வீற்றிருக்கிறது காலதெய்வம் கருப்பையா முத்தையா கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா வெகுவிமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் கரடிக்கல் உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட கிராமங்களில் இளைஞர்கள், முதியவர்கள் என 7,000- க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். திருவிழாவில் சாமிக்கு 60- க்கும் மேற்பட்ட கிடாக்களைப் பலியிட்டு, அவை சமைத்த பின்னர், ஆவி பறக்க படையலிட்டு கால தெய்வத்தை வழிபட்டனர்.

Advertisment

Curry Festival for Men Only!

அதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் கறிவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. ஆளுக்கு ஒரு வேலை செய்து ஏற்பாட்டை செய்து முடித்த குழுவினர், நீண்ட வரிசையில் வாழை இழையை விரித்து சாதமும் மற்றும் ஆட்டுக்கறி குழம்பும் பிரசாதமாக வழங்கப்பட்டது. கறிவிருந்து முடிந்ததும் ஆண்கள் அனைவரும் இழையை எடுக்காமல் திரும்பிவிடுவர்.

இலைகள் காய்ந்து, அந்த பகுதியில் இருந்து கலைந்த பிறகே பெண்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற மரபு உள்ளதாகவும், அது இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisment