தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து இருக்கும் நிலையில், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்க சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தைத் தமிழக அரசு கூட்டியுள்ளது. மாலையில் தொடங்கிய இந்த ஆலோசனையில் துவக்க உரையாற்றிய மு.க ஸ்டாலின், " தமிழக அரசு இந்த கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்க பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறது. கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் அதனை மதிக்காமல் வெளியே சுற்றுகிறார்கள். எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கலாமா அல்லது மாற்றியமைக்கலாமா என்பது குறித்து உங்களின் ஆலோசனைகளைக் கூறுங்கள், அதன்படி அரசு செயல்படும்" என்றார். அவரின் உரையை அடுத்து ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.