மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது.
மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளார்கள். மாவட்டங்களிலும் கரோனா தொற்று வேகமாக அதிகிரித்து வருகின்றது. குறிப்பாக வட தமிழகத்தில் கரோனா வேகமாக பரவி வருகின்றது. சென்னையை சுற்றியுள்ள மாட்டங்களில் அதன் தாக்கம் அதிகளவில் இருந்து வருகின்றது. இதுதொடர்பாக இன்று முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதற்கிடையே கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தொலைக்காட்சியில் பேச உள்ளார். இதில் இவர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.