Curfew extension in Tamil Nadu ... Government of Tamil Nadu has announced the extension date!

Advertisment

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மாவட்டங்களுக்கு ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டு, கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் ஊரடங்கு பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து தமிழக முதல்வர் பல்வேறு கட்டங்களாக ஆலோசனைகள் ஆய்வுகள் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போழுது மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 7-ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

குடியிருப்பு பகுதிகளில் தள்ளுவண்டி மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் ஜூன் மாதம் முதல், 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு இந்த 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். அதேபோல் மாவட்டங்களில்நடைமுறையிலுள்ள நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் பழங்கள் விற்பனை என்பது தொடர்ந்து நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன், தொலைபேசியில் வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருட்களை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்குச் சென்று வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.