Advertisment

ஊரடங்கு நீட்டிப்பு... தமிழகத்தின் இன்றைய கரோனா நிலவரம்!

Curfew extension ... Corona situation in Tamil Nadu today!

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 730 லிருந்து அதிகரித்து 720 ஆகப் பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விடச் சற்று குறைவு. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,00,048 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 115 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 105 என்று இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.

Advertisment

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,481 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 5 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 8,244 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 758 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 26,82,192 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். இணை நோய்கள் ஏதும் இல்லாத 2 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை-109, ஈரோடு-69, செங்கல்பட்டு-53, காஞ்சிபுரம்-18, திருவள்ளூர்-28, தஞ்சை-115, நாமக்கல்-42, சேலம்-47, திருச்சி-46 , திருப்பூர்-61 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 வயதிற்குட்பட்ட சிறார்கள் 57 பேருக்கு கரோனா இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Advertisment

ஒமிக்ரான் வகை கரோனாவை தடுக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இன்று தமிழக அரசு கரோனாஊரடங்கை வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

medicine Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe