திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இருக்கும் ஏபி நகர், அந்தோணியார் தெரு, பிஸ்மி நகர், எம்ஜிஆர் நகரில் இருக்கக் கூடிய பொதுமக்கள் பெரும்பாலானோர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக லோன் வாங்கியுள்ளனர். இப்படி வாங்கிய லோன் பணத்தை மக்கள் வாரந்தோறும் செலுத்தி வந்தனர். ஆனால் தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது. இதனால் பொது மக்கள் வேலைக்கு செல்ல இயலாததால் தவணைத் தொகையையும் செலுத்த முடியவில்லை. அதனால் சுய உதவிக்குழு அதிகாரிகள் வீடுகளுக்கே வந்து லோன் வாங்கிய மக்களை மிரட்டி பணம் கேட்டு வருவதால் மக்கள் டென்ஷன் அடைந்து வருகிறார்கள்.

Curfew ... civilians unable to go to work

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், "உலகமே கரோனா வைரஸை கண்டு பயப்படும் சூழ்நிலையில் தமிழக அரசு பிறப்பித்த 144 தடை உத்தரவு ஏற்று நோய் பரவாமல் இருக்க வேலைக்கும், வெளியில் செல்லாமல் வீட்டில் இருக்கின்றோம். அப்படி இருக்கும் போது மகளிர் சுய உதவி குழு அதிகாரிகள் தவணை தொகையை உடனே செலுத்தச் சொல்லி மிரட்டுகின்றனர்.

ஆனால் பொதுமக்களாகிய நாங்கள் தவணை தொகையை தடை உத்தரவு முடிந்த பிறகு செலுத்துக்கின்றோம் என்று கோரிக்கை வைத்தோம். அதற்கு முடியாது என்றும் உடனே செலுத்தச் சொல்லி வற்புறுத்துகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுத்து எங்களை காப்பற்றுமாறு அரசுக்கு வலியுறுத்தி மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளோம் என்று கூறியுள்ளனர்.

ஆனால் கரொனா பீதியால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும்போது லோன் செலுத்தச் சொல்லி சுய உதவிக் குழு அதிகாரிகள் மிரட்டியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.