Advertisment

ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது, விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி - மு.க. ஸ்டாலின் பேச்சு

கரோனாவை வெல்வோம்!

நமக்கான வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம்! https://t.co/ux2rbeaOqS

தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதையும் தாண்டி, தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக முதல்வர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில், "தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாவட்டங்களில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அது வரும் நாட்களில் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே செல்ல முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். எனவே கரோனா சங்கிலியை உடைக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisment

Corona Lockdown mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe