Skip to main content

துவரை தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பு... விவசாயி கைது!

Published on 24/08/2020 | Edited on 24/08/2020

 

Cultivation of cannabis plants in the garden

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் கிழக்கு வட்டம் பகுதியில் துவரை பயிர் செய்துள்ள தோட்டத்தில் துவரைகளுக்கு நடுவில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான பூபதி போலீசாரால் கைது செய்யபட்டார்.

 

துவரை தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்ப்பு பற்றி ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. அவர்கள் அதிரடியாகச் சென்று நிலத்தில் ஆய்வு செய்தபோது தகவல் உண்மை எனத் தெரியவந்த உடன் பூபதியை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 35 கிலோ எடையுள்ள 40 கஞ்சா செடிகளை போலீசார் பிடிங்கி அங்கேயே அழித்தனர். இதன் மதிப்பு 2 லட்சம் என்றனர்

 

Cultivation of cannabis plants in the garden

 

ஜவ்வாது மலைப்பகுதியில் தொடர்ச்சியாக கஞ்சா பயிரிடுவது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

 

சார்ந்த செய்திகள்