/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3810.jpg)
சேலம் முகமதுபுரம்தெருவைச் சேர்ந்தவர் ஷாஹூல். இவரிடம்சேலம் சின்னக்கடை வீதியைச் சேர்ந்த ரத்தினசபாபதி மகன் ஆனந்தராஜா (43)கடந்த பிப்ரவரி22ம் தேதிமது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் மறுத்ததால்கத்தியைக் காட்டி மிரட்டிஅவரிடம் இருந்த அலைபேசி, சட்டைப்பையில் இருந்த 1200 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து ஷாஹூல் அளித்த புகாரின் பேரில்சேலம் நகர காவல்நிலைய காவல்துறையினர் ஆனந்தராஜாவை சம்பவத்தன்றே கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ஆனந்தராஜா மீது ஏற்கனவேபரோட்டா மாஸ்டர் ஒருவரை கட்டையால் தாக்கிய வழக்கும் உள்ளது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால்அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை துணை ஆணையர் லாவண்யா, மாநகர ஆணையர் விஜயகுமாரிக்கு பரிந்துரைத்தார்.
இதையடுத்துஆணையர் விஜயகுமாரியின் உத்தரவின் பேரில்ரவுடி ஆனந்தராஜாவை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் குண்டர் சட்ட கைது ஆணை வழங்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)