Skip to main content

''நிலத்தடிநீரை காக்கும் குளங்கள் சீரழிந்து வருகிறது...''- தூர்வாறி சீரமைக்க பொதுமக்கள் மனு!!

Published on 09/02/2020 | Edited on 09/02/2020

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த 11 கிமீ தூரத்தில் மதுராந்தகநல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமம் சோழர்கால ஆட்சியில் மதுராந்தகசோழர் தில்லை நடராஜர் வணங்குவதற்கு வரும்போது தங்கியுள்ளதால் இந்த ஊரை அவரது பெயரை கொண்டு அழைப்பட்டு வருவதாக அவ்வூரில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். இந்த ஊரின் நிலத்தடி மற்றும் குடிநீர் ஆதாரத்தை காக்கும் வகையில் திருக்குளம், ஆழங்காத்தா குளம், மொளலிகுளம் உள்ளிட்ட மூன்று குளங்கள் உள்ளது. இந்த குளங்கள் ஆக்கிரமிப்பால் தூர்ந்து குளங்கள் முழுவதும் ஆகய தாமரை செடிகள் உள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு அவதி அடைந்து வருவதாக கூறுகிறார்கள்.

 

Groundwater protection ponds are deteriorating

 

இதுகுறித்து அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணமச்சாரி என்பவர், மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வனுக்குக்கு மனு அனுப்பியுள்ளதாக கூறிய அவர், இந்த ஊரில் உள்ள குளங்களில் டாஸ்மாக் மதுபாட்டில், கப், தண்ணீ பாட்டில் ஆகாய தாமரை செடிகள் என அசுத்தமாக உள்ளது. இந்த குளங்களில் கோடையில் கால்நடைகள் தண்ணீர் குடிக்க, பொதுமக்கள் குளிக்க என அனைத்து மக்களின் பயன்பாட்டுக்கும் உதவியாக இருக்கும். இப்படியுள்ள குளத்தில் தற்போது கால் வைக்கவே பயமாக உள்ளது. கதண்டு என்ற விச வண்டுகள் மற்றும் அதைவிட கொடுமையாக மதுபான பாட்டிலை குடித்துவிட்டு உடைத்து போடுகிறார்கள்.

 

Groundwater protection ponds are deteriorating

 

குளத்தில் கால் வைக்கவே பயமாக உள்ளது. நிலத்தடி நீர் கொஞ்சம் உப்பாக மாறியுள்ளதால் கொள்ளிடம் கூட்டு குடிநீர் அமைக்கப்பட்டது. அமைக்கபட்டதோடு அது அப்படியே கிடக்கிறது. எனவே  மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

தனச்செல்வி என்ற பெண் கூறுகையில், ஊரில் கழிப்பிடத்திற்கு செல்ல இடமில்லை. தற்போது அனைத்து வயல்களிலும் மகசூல் போட்டாச்சு இதனால் ஊரில் உள்ள மக்கள் ஆண், பெண் என அனைவரும் சாலையின் இரு புறமும் இருட்டு நேரத்தில் இயற்கை உபாதை கழிக்கிறார்கள். இதனால் நோய் பரவும் அவலம் ஏற்பட்டுள்ளது. அரசு உனடியாக தலையீட்டு இதனை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்;நடந்தது என்ன? - காவல்துறை விளக்கம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
womanincident What happened Police explanation

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமாணியம் கிராமத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக ஒரு பெண் வெளியில் கூறியதாகவும், இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த சிலர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த பெண்ணை பலமாக தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும் கூறப்பட்டது. இது குறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருபுறம் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்). ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும். ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும் தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது. கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC)  அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர், 1. கலைமணி 2. தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5. அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

woman incident What happened Police explanation

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், சமூகவலைத்தளங்களில் பரவிய ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.