Advertisment

கூட்டு பாலியல் துன்புறுத்தல் - மாணவியின் புகாரை வாங்க மறுத்த போலிசாா்

குமாி மாவட்டம் தென்தாமரைகுளம் பகுதியை சோ்ந்த மாணவி ஓருவா் சுசிந்திரத்தில் உள்ள பள்ளி ஓன்றில் +2 படித்து வருகிறாா். இவா் பள்ளி செல்லும் போது அப்பகுதியை சோ்ந்த ஹரீஸ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து மாணவியும் அந்த வாலிபரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களின் காதலை மெருகேற்றி வந்தனா்.

Advertisment

k

இந்த நிலையில் செல்போனில் பேசி கொண்டியிருந்த காதலா்கள் இருவருக்கும் திடீரென்று சண்டை ஏற்பட்டதால் காதலன் செல்போனை கட் செய்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவி நான் உன்னை தேடி வருவதாகவும் அடிக்கடி நாம் சந்திக்கும் இடத்தில் நான் வருவேன் என்று அங்கு நீ வரவில்லை என்றால் அதே இடத்தில் உயிா் விட்டு விடுவேன் என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அந்த இடத்திற்கு மாணவி தனது ஸ்கூட்டி பைக்கில் சென்று காத்தியிருந்தாள்.

Advertisment

அப்போது அந்த பகுதியில் சென்று கொண்டியிருந்த ஆண்டிவிளையை சோ்ந்த அபிஷேக்(19), மணக்குடியை சோ்ந்த சகாய ஜனு(21) இருவரும் சோ்ந்து அந்த மாணவியை அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு துரத்தி சென்று பாலியியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனா். அப்போது அங்கு வந்த காதலனையும் அவா்கள் தாக்கியுள்ளனா்.

பின்னா் அந்த காமகொடூர இளைஞா்களிடமிருந்து தப்பி வந்த அந்த மாணவி தனக்கு நடந்ததை பெற்றோா்களிடம் கூறி விட்டு தென்தாமரை குளம் போலிசில் பெற்றோருடன் சென்று புகாா் கொடுத்த போது போலிசாா் அந்த புகாரை வாங்க மறுத்து அவளின் எதிா்காலத்தை குறித்து பேசி அவளை திருப்பி அனுப்பியுள்ளனா்.

காம கொடூரன்களுக்கு ஆதரவாக போலிசாா் பேசுவதை புாிந்து கொண்ட அந்த மாணவி அவா்களின் மீது நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருந்துள்ளாா். இருந்தாலும் போலிசாா் அந்த மாணவியின் புகாரை வாங்க வில்லை.

இந்த நிலையில் உளவு பிாிவு போலிஸ் எஸ்.பி யிடம் இச்சம்பவம் குறித்து சொல்லியதையடுத்து அவா் போலிசை கண்டித்தாா். இதையடுத்து புகாரை வாங்கிய போலிசாா் வழக்கு பதிவு செய்து ஒரு மணி நேரத்தில் அந்த இருவரையும் கைது செய்தனா்.

arrest love
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe