Skip to main content

கூட்டு பாலியல் துன்புறுத்தல் - மாணவியின் புகாரை வாங்க மறுத்த போலிசாா்

Published on 08/07/2019 | Edited on 08/07/2019

 

         குமாி மாவட்டம் தென்தாமரைகுளம் பகுதியை சோ்ந்த மாணவி ஓருவா் சுசிந்திரத்தில் உள்ள பள்ளி ஓன்றில் +2 படித்து வருகிறாா். இவா் பள்ளி செல்லும் போது அப்பகுதியை சோ்ந்த ஹரீஸ் என்ற  வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து மாணவியும் அந்த வாலிபரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களின் காதலை மெருகேற்றி வந்தனா்.

 

k

     

   இந்த நிலையில் செல்போனில் பேசி கொண்டியிருந்த காதலா்கள் இருவருக்கும் திடீரென்று சண்டை ஏற்பட்டதால் காதலன் செல்போனை கட் செய்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவி நான் உன்னை தேடி வருவதாகவும் அடிக்கடி நாம் சந்திக்கும் இடத்தில் நான் வருவேன் என்று அங்கு நீ வரவில்லை என்றால் அதே இடத்தில் உயிா் விட்டு விடுவேன் என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அந்த இடத்திற்கு மாணவி தனது ஸ்கூட்டி பைக்கில் சென்று காத்தியிருந்தாள். 

 

          அப்போது அந்த பகுதியில் சென்று கொண்டியிருந்த ஆண்டிவிளையை சோ்ந்த அபிஷேக்(19), மணக்குடியை சோ்ந்த சகாய ஜனு(21) இருவரும் சோ்ந்து அந்த மாணவியை  அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு துரத்தி சென்று பாலியியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனா். அப்போது அங்கு வந்த காதலனையும் அவா்கள் தாக்கியுள்ளனா். 

 

         பின்னா் அந்த காமகொடூர இளைஞா்களிடமிருந்து தப்பி வந்த அந்த மாணவி தனக்கு நடந்ததை பெற்றோா்களிடம் கூறி விட்டு தென்தாமரை குளம் போலிசில் பெற்றோருடன் சென்று புகாா் கொடுத்த போது போலிசாா் அந்த புகாரை வாங்க மறுத்து அவளின் எதிா்காலத்தை குறித்து பேசி அவளை திருப்பி அனுப்பியுள்ளனா்.  

 

காம கொடூரன்களுக்கு ஆதரவாக போலிசாா் பேசுவதை புாிந்து கொண்ட அந்த மாணவி அவா்களின் மீது நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருந்துள்ளாா். இருந்தாலும் போலிசாா் அந்த மாணவியின் புகாரை வாங்க வில்லை.

           இந்த நிலையில் உளவு பிாிவு போலிஸ் எஸ்.பி யிடம் இச்சம்பவம் குறித்து சொல்லியதையடுத்து அவா் போலிசை கண்டித்தாா். இதையடுத்து புகாரை  வாங்கிய போலிசாா் வழக்கு பதிவு செய்து ஒரு மணி நேரத்தில் அந்த இருவரையும் கைது செய்தனா். 

சார்ந்த செய்திகள்

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.