Advertisment

விருத்தாச்சலம் அருகே இறந்தவரின் உடலை ஆபத்தான முறையில் ஆற்றில்  தூக்கிச் செல்லும் அவலம்! 

Cuddalore virudhachalam Vellaru river issue

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள தேவங்குடி - கீரமங்கலம் இடையே வெள்ளாறு ஓடுகிறது. அந்தப் பகுதியில் யாராவது இறந்து விட்டால் உடலை அடக்கம் செய்வதற்காக ஆற்றுவழியே கொண்டு சென்று இறுதிச்சடங்குகள் செய்வார்கள்.

Advertisment

கீரமங்கலம் கிராமத்தில் 60 வயது மிக்க சங்கரன் என்ற முதியவர் நேற்று முன்தினம் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். தற்போது தொடர் மழையினால் வெள்ளாற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், அவரது சடலத்தை அடக்கம் செய்வதற்கு ஆபத்தான முறையில் அதிவேகமாக வெள்ளம் செல்லக்கூடிய வெள்ளாற்றில் சடலத்தைத்தூக்கிச் செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisment

தங்கள் கிராமத்தில் நிரந்தரமான சுடுகாடு இல்லாத காரணத்தினால், மழைக் காலங்கள் மற்றும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்ற நாட்களில் இதுபோன்று இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய, உயிரைப் பணையம் வைத்து ஆற்றைக் கடந்து செல்லும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளோம் என்றும், ஆதலால் நிரந்தரமாக தங்களது கிராமத்தில் சுடுகாடு அமைத்துத்தரவேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Cuddalore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe