கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பூவனூர் கிராமத்தின் வழியாக செல்லும் ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத நபர் தலை சிதைந்த நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

Advertisment

அவ்வழியே சென்ற அப்பகுதி மக்கள் அதனை பார்த்ததும் விருத்தாச்சலம் ரயில்வே காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இவ்விசாரணையில் உயிரிழந்த நபர் மங்கலம்பேட்டை தென்றல் நகரை சேர்ந்த தர்மராஜ் மகன் மணிவண்ணன் என்பது தெரியவந்தது.

cuddalore virudhachalam railway track incident police investigation

பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இன்று (29.11.2019) காலை 08.30 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு, சென்னை நோக்கி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து செல்லும்போது மணிவண்ணன் சொந்த, குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? ரயில் வருவதை தெரியாமல் விபத்துக்குள்ளானாரா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.