/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01-vilipuram.jpg)
400 கிலோ போதைப்பொருள் கடத்திவரப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதிகளில் காவல்துறையினர், நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விருத்தாசலம் புறவழிச் சாலையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது அந்த காரில் தடை செய்யப்பட்டபோன்ற போதைப் பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் காரில் இருந்த இரண்டு வடமாநில இளைஞர்களையும் கைது செய்தனர்.கார் மற்றும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்து, விருத்தாசலம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குல்தீப் சிங், நிர்மல் சிங் என்பதும் அவர்கள் பெங்களூரில் இருந்து 5 லட்சம் மதிப்பில், 30 மூட்டைகளில் 400 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட பொருட்களை காரில் கடத்தியதும் தெரியவந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)