Advertisment

உதயநிதி பிறந்தநாள் கபடி போட்டி; அமைச்சர்கள் பங்கேற்பு

Advertisment

தி.மு.க மாநில இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய அளவிலான மாபெரும் கபடி போட்டி நெய்வேலி தொகுதி கொள்ளுக்காரன்குட்டையிலுள்ள வள்ளலார் மெட்ரிக் பள்ளி வளாகம் எதிரில் நடைபெற்றது. கபடி போட்டியைக் கடந்த 19ஆம் தேதி நெய்வேலி எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

லீக் முறையில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு போலீஸ், சென்னை சிட்டி போலீஸ், தமிழக வனத்துறை, தஞ்சாவூர், சேலம், புதுக்கோட்டை, மதுரை, கடலூர், நெய்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணி கபடி வீரர்கள் பங்கேற்றனர். கபடி போட்டியை அரங்கம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு காவல்துறையும் - டெல்டா ஸ்டோர்ஸ் வடுவூர் அணிகளும் பங்கேற்றனர். இறுதியில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி பெற்றது. இதேபோல் பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் சிட்டி போலீஸ் அணியும், ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி அணியும் விளையாடின. இறுதியில் சென்னை சிட்டி போலீஸ் அணி வெற்றி பெற்றது.

Advertisment

போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளையும், வெற்றி கோப்பைகளையும் வழங்கினர். முதல் பரிசு வென்ற ஆண்கள் பிரிவு அணிக்கு ரூபாய் 1,50,000, பெண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ரூபாய் 75,000 வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி ஒன்றிய குழுத்தலைவர் சபா.பாலமுருகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், த.வா.க மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் திருமால்வளவன், டி.எஸ்.பி ஷபிபுல்லா, ராஜேந்திரன், தொ.மு.ச பேரவை இணை பொதுச்செயலாளர் சுகுமார், மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், குணசேகரன், நெய்வேலி நகர செயலாளர் பக்கிரிசாமி, என்.எல்.சி தொ.மு.ச தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் பாரி, பொருளாளர் ஐயப்பன், அலுவலக செயலாளர் ஜெரால்டு, பொதுக்குழு உறுப்பினர்கள் புகழேந்தி, அறிவழகன், பண்ருட்டி துணை சேர்மன் தேவகி ஆடலரசன், நெய்வேலி நகர அவைத்தலைவர் நன்மாற பாண்டியன், கபடி சங்கம் மாவட்டச் செயலாளர் நடராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின், வள்ளலார் கல்வி குழும நிர்வாகிகள், தி.மு.க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

minister sports Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe