Advertisment

மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது! 

cuddalore thittakudi issue husband arrested by police

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைஅடுத்த பெரியார் நகரில் வாடகை வீட்டில் வசித்துவருபவர் தமிழ் மாணிக்கம் என்கின்ற ராஜமாணிக்கம். இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகி. இவரது மனைவி கற்பகம், இவர்களுக்கு 3 குழந்தைகள்.

Advertisment

இவர்களுக்கிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 06-09-2020 அன்று கற்பகம் எலி பேஸ்ட் சாப்பிட்டு உயிருக்கு போராடிய நிலையில்திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி கற்பகம் உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம் கீரனூரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில் கற்பகம் அவர்களின் தாயார் கனகம், சகோதரி கம்சலா ஆகியோர் திட்டக்குடி காவல்நிலையத்தில் கற்பகம் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், இறப்பிற்கு காரணம் அவரது கணவர் ராஜமாணிக்கம் என்றும் புகார் தெரிவித்தனர். அவர்கள் அளித்தபுகாரின்பேரில், திட்டக்குடி டி.எஸ்.பி வெங்கடேசன் மேற்பார்வையில் திட்டக்குடி காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளர் சந்துரு ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்குப்பின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

husband vck wife
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe