Skip to main content

ஆட்டோ கவிழ்ந்து விபத்து... பள்ளி மாணவர்கள் படுகாயம்.

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இருப்புக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள தூய இருதய பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 2000- த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பகுதியில் உள்ள முதனை, இருப்புக்குறிச்சி, எடக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களுக்கு ஒரு சில நேரங்களில் மட்டும் குறிபிட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

ஆதலால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், அரசக்குழி கிராமத்தில் இருந்து ஷேர் ஆட்டோவையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில்  இருப்புக்குறிச்சியில் உள்ள பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக ஷேர் ஆட்டோ மூலம் 7- ஆம் வகுப்பு மாணவி சோனா ஆப் ஆர்க்,  ஆசிரியை மார்க் ரேட், 12- ஆம் வகுப்பு மாணவன் கதிரவன் மற்றும் முகேஷ் உடன்  ஆட்டோ டிரைவர் ராய் ஓட்டி வந்துள்ளார். அப்போது இருப்புகுறிச்சி கிராமத்தை அடுத்து உள்ள வளைவில் செல்லும் போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்தது. 

CUDDALORE SHARE AUTO INCIDENT STUDENTS ADMIT AT HOSPITAL


இதனால் ஆட்டோவில் பயணித்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊமங்கலம் காவல்துறையினர் பலத்த காயம் அடைந்த பள்ளி மாணவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன. 

இதில் 12- ஆம் வகுப்பு மாணவர்களான முகேஷ் மற்றும் கதிரவன் மேல் சிகிச்சைக்காக முன்டியம்பாக்கம் கொண்டு சென்றனர். மேலும்  தொழில் போட்டியின் காரணமாக ஷேர் ஆட்டோக்கள் வேகமாக செல்வதால், அச்சத்துடன் பயணிப்பதாக பள்ளி மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். இச்சம்பவத்தால் பள்ளி மாணவர்களிடையே பெரும் சோகம் நிலவி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'நகைக்காகப் பாசத்தைப் பொழிந்த மாமியார்; மருமகள் எடுத்த சோக முடிவு

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
'Mother-in-law who showered affection on jewelry; A sad decision taken by the daughter-in-law

நகை கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் மருமகள் மாமியார் இடையே ஏற்பட்ட சண்டையில் மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை தாம்பரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் பவானி நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் பிரேம்குமார்-மஞ்சுளா தம்பதி. ஆட்டோ ஓட்டி வந்த பிரேம்குமார் டிவி ஷோரூமில் பணியாற்றி வந்த மஞ்சுளாவை சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மருமகள் மஞ்சுளாவை நன்கு கவனித்து வந்த மாமியார் சித்ரா, மஞ்சுளா அணிந்திருந்த 15 சவரன் நகைகளில் 12 சவரன் நகையை அவசர தேவைக்காக கேட்டுள்ளார்.

மஞ்சுளாவும் மாமியார் சித்ராவிற்கு நகைகளை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நான்கு மாதங்களுக்கு பிறகு தன்னுடைய நகையை திரும்பத் தரும்படி மாமியார் சித்ராவிடம் மஞ்சுளா கேட்டுள்ளார். ஆரம்பத்தில் பாசத்தை பொழிந்த மாமியார் சித்ரா மருமகள் மீண்டும் நகையை கேட்டதால் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அடிக்கடி மாமியார் மருமகள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் மணிமங்கலத்தில் தனியாக வீடு எடுத்து பிரேம்குமாரும் மஞ்சுளாவும் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கணவன் பிரேம்குமாரிடம் நகையைக் கேட்டு வாங்கி தரும்படி மஞ்சுளா கேட்ட பொழுது பிரேம்குமாருக்கும் மஞ்சுளாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டது. இதனால்  வீட்டின் அறைக்குள் சென்ற மஞ்சுளா பல மணி நேரமாகியும் வெளியே வராததால் பிரேம்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்துக் கொண்டு சென்ற பொழுது உள்ளே மின்விசிறியில் மஞ்சுளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தற்கொலை செய்து கொண்ட மஞ்சுளா இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மஞ்சுளாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த பெண்ணின் உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து, உடனடியாக தன்னுடைய மகளின் உயிரிழப்பு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் சமாதானப்படுத்தி போராட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Next Story

'410 ஆசிரியர்களுக்குப் பணி வழங்குக' - நீதிமன்றம் உத்தரவு

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
'Give employment to 410 teachers'- court orders

10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போட்டி தேர்வை எதிர்த்து 410 ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். கடந்த 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி பெற்று சான்றிதழ் சரிபார்க்கும் பணி முடிவடைந்த நிலையில் 10 ஆண்டுகளாக 410 ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காக காத்திருந்து வருகின்றனர். தகுதித் தேர்வு எழுதி பணி நியமனத்திற்கு காத்திருக்கும் நேரத்தில் 2018 ஆம் ஆண்டு போட்டி தேர்வை அரசு கொண்டு வந்ததால்  பணி நியமனம் இல்லாமல் காத்திருக்கும் ஆசிரியர்கள் 410 தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்றம் சென்றுள்ள நீதிபதி மகாதேவன் அமர்வுக்கு முன்பு விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில் விசாரணைகள் முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. போட்டித் தேர்வு என்பது 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவு அதற்கு முன்னதாகவே மனுதாரர் 410 பேரும் மாநில அரசின் திட்டத்தின் படிதகுதித் தேர்வு எழுதியுள்ளனர். எனவே 410 பேருக்கும் தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.