Cuddalore Private Bus Accident; Increase in casualties

Advertisment

கடலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையில் நெல்லிகுப்பம் அடுத்துள்ள பட்டாம்பாக்கம் பகுதியில்பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த இரு தனியார் பேருந்துகள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி நொறுங்கின.

இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரு பேருந்துகளிலும் பயணம் செய்த சுமார் 80 பேர் கடலூர் அரசு மருத்துவமனைக்குசிகிச்சைக்குக் கொண்டு சென்று சேர்க்கப்பட்டுள்ளனர். பலர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குஆழ்ந்த இரங்கலையும்காயமடைந்தவர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும்படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும்லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாயும்முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.