Advertisment

கர்ப்பிணி பெண்ணை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த நான்கு இளைஞர்கள் கைது!

கடலூர் புதுப்பாளையம் பகுதியில் கணவனுடன் வசித்து வருகிறார் 21 வயது இளம்பெண். இவர்களுக்கு கல்யாணமாகி ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது 5 மாத கர்பிணியாகவும் உள்ளார். இந்நிலையில் தனது கணவருடன் இரவு படம் பார்க்க தியேட்டருக்குச் சென்றுள்ளார்.

Advertisment

cuddalore pregnant lady issue-four people arrested

படம் முடிந்து வீட்டிற்கு திரும்பி வரும்போது, நான்கு பேர் கொண்ட மர்மகும்பல் அந்த பெண்ணின் கணவரை சரமாரியாக தாக்கி விட்டு அந்த பெண்ணை காரில் கடலூர் கம்மியம்பேட்டையில் உள்ள காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளது. பின்னர் அந்த பெண்ணை மீண்டும் காரில் அழைத்துக் கொண்டு வீட்டின் அருகில் விட்டு சென்றுள்ளது. இதுகுறித்து அந்த பெண் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட திருப்பாதிரிபுலியூர் மார்கெட் தெருவைச் சோ்ந்த ராமு மகன் பிரசாத்(23), காட்டுராஜா மகன் ஆட்டோ ஓட்டுநா் நாகமுத்து (23), குமார் மகன் பிரபாகரன் (23), இந்திரா நகரைச் சோ்ந்த அரிகிருஷ்ணன் மகன் முனுசாமி (23) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கணவரை தாக்கி விட்டு கர்ப்பிணியை காரில் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment
Cuddalore Pregnant woman police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe