தனிமைப்படுத்திக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

corona

கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கு பணியில் இருந்தவர்களிடம் உமிழ்நீர் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அந்தப் பரிசோதனை முடிவில் இரண்டு போலீசாருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில் சிலரது பரிசோதனை முடிவுகள் வந்தன. இதில் நில அபகரிப்பு பிரிவில் பணியாற்றும் மேலும் ஒரு பெண் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மற்றொரு சப்இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் கரோனா (தனிப்பிரிவு) சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணி செய்து வந்த ஐந்து போலீசாருக்கு கரோனா ஏற்பட்டுள்ளதையடுத்து மாவட்ட எஸ்.பி. அபிநவ் அவர்கள் அவரது குடியிருப்பிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். அதன்படி அவர் தனது வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதைத் தவிர்த்து வீட்டிலேயே இருந்து வருகிறார் என்று கூறுகின்றனர் காவல்துறையினர்.

corona corona testing Cuddalore police
இதையும் படியுங்கள்
Subscribe