Skip to main content

‘எமதர்மன்’, ‘காட்டேரி’- நாடகக் கலைஞர்களின் விநோத பிரச்சாரம்!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020

 

கரோனா நோய் மக்களுக்குப் பரவாமல் தடுத்து வைக்க அரசு மற்றும் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்து வருகிறது.அப்படியும் பொதுமக்கள் காய்கறி ,மளிகை பொருட்கள் வாங்கும் இடங்களில்  இடைவெளி இல்லாமல்  கூட்டம் கூட்டமாகச் சென்று முட்டி மோதிக்கொண்டு வாங்குகிறார்கள்.


 

c


காவல்துறை எப்படி கண்டித்தும் அதைக் கேட்பதில்லை.இதற்காக கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை காவல்துறையினர் ஒரு வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நகரில் நடத்தி வருகிறார்கள்.மக்கள் நடமாட்டம் உள்ள சாலைகளில் நாடகக் கலைஞர்களைக் கொண்டு எமதர்மன் வேடமிட்டும், காட்டேரி வேடமிட்டும் (இந்தக் காட்டேரிக்குப் பெயர் கரோனா காட்டேரி) விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இவர்கள் மூலம் தெருக்களில், மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

 

c

 

அத்தியாவசியத் தேவைக்காக வெளியே வரும்போது முகக் கவசம் அணியவேண்டும். தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை நிறுத்த வேண்டும்.நாம் நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் கரோனா பரவாமல் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.இதுபோன்ற வாசகங்களைப் பேச்சு மற்றும் பாடல்கள் மூலம் மேளதாளத்துடன் பம்பை உடுக்கை வாசித்தபடி ஆடி பாடியபடி வருகிறார்கள்.

 

c

 

"இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை" இப்படிப்பட்ட பாடல்களை அவர்கள் பாடும் போது மக்கள் மிகவும் மனம் நெகிழ்ந்து கேட்கிறார்கள். எமதர்மன் வேடமிட்டவர் மோட்டார் பைக்கில் வலம் வந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இது மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.இதன்மூலம் அரசின்தடை உத்தரவை நாம் அனைவரும் மீறக் கூடாது.அந்தத் தடை உத்தரவு நம்மை நம் உயிரை பாதுகாக்கவே அரசு செய்துள்ளது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்று மக்களிடம் மனமுருக பாடியும்,பேசியும் நடித்துக் காட்டி வருகிறார்கள் எமதர்மன், காட்டேரி வேடமிட்ட நாடகக் கலைஞர்கள்.இது ஒரு வித்தியாசமான விழிப்புணர்வு பிரச்சாரமாக மங்கலம்பேட்டை கடை வீதி மற்றும் மக்கள் வசிக்கும் தெருக்களில் நடைபெற்று வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு; அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திருப்பம்

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

Judgment after approximately 5 years; A twist in the case of AIADMK leader Panchanathan

 

கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர் மற்றும் அதிமுக நிர்வாகியான பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடலூரில் தேவனாம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக இந்த தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சோனாங்குப்பத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.

 

இது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 21 பேர் கைது செய்யப்பட்டு 20 பேர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. விடுபட்ட நபர் வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

இதன்படி, கந்தன், ஆறுமுகம், சரண்ராஜ், சுரேந்தர், ஓசைமணி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.

 

 

Next Story

யார் முதலில் முந்துவது என போட்டி - பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

Published on 11/10/2022 | Edited on 11/10/2022

 

school vans incident students cuddalore district



பள்ளி வாகனங்கள் ஒன்றையொன்று முந்தும் முயற்சியில் ஒரு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். 

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள கோபாலபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களை ஏற்றிக் கொண்டு அப்பள்ளியைச் சேர்ந்த இரு வேன்கள் போட்டிப்போட்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வேன் முந்த முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், 25 மாணவ, மாணவிகள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

 

இதற்கிடையே பள்ளி வாகன ஓட்டுநர்கள் பொறுப்பின்றி செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி கோ.ஆதனூர் கிராம மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.