Skip to main content

நிலத்தடி நீரை பாதிக்கும் குடிநீர் நிறுவனத்தை முற்றுகையிட்டு  கடலூர் மக்கள் போராட்டம்! 

Published on 08/10/2018 | Edited on 08/10/2018
tnj

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுக்குப்பத்தில் சமுதாய குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கும் கம்பெனியை நகராட்சி ஆணையர் பாலு இன்று திறந்து வைத்தார். 

 

அதேசமயம் அப்பகுதியில் நிலத்தடி நீர் குறைவாக இருப்பதாலும், தண்ணீர் பற்றாகுறை உள்ளதாலும் குடிநீர் கம்பெனி திறக்க கூடாது என்று அப்பகுதி மக்கள் ஏற்கனவே நகராட்சி ஆணையர் மற்றும் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்திருந்தனர். ஆனால் அம்மனுவை பரிசீலனை செய்யாமல்,  நகராட்சி ஆணையர் குடிநீர் கம்பெனியை திறந்து வைத்தார். 

 

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கோட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் மக்களுக்கு எதிரான குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை திறந்ததால் ஆத்திரமடைந்தனர். அதையடுத்து நகராட்சி ஆணையரை கண்டித்தும், குடிநீர் கம்பெனியை மூடக் கோரியும் அப்பகுதி பொதுமக்கள்  குடிநீர் கம்பெனியை முற்றுகையிட்டு, முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்