ccc

Advertisment

கடலூர் அருகே 16 வயது சிறுமியைத் திருமணம் செய்ய முயன்ற 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் கிள்ளை வடக்குச்சாவடி பூக்கடை தெருவைச்சேர்ந்த 16 வயது சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். கடந்த ஜூன் 29ஆம் தேதியில் சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப் பதிவு செய்த காவலர்கள் இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் ஜூலை 10 ஆம் தேதி அந்தச் சிறுவனும் சிறுமியும் வடலூரில் திருமணம் செய்து கொண்டு அங்கேயே ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ளனர். சில நாட்கள் சென்ற பின் இருவரும் மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக நேற்று முன்தினம் கிள்ளை மண்டபம் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தபோது அவர்களை கிள்ளை காவல் நிலைய ஆய்வாளர் அமுதா மற்றும் காவலர்கள் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

Advertisment

http://onelink.to/nknapp

விசாரணைக்குப் பிறகு வழக்குப்பதிந்துபோக்சோ சட்டத்தில் சிறுவனைக் கைது செய்தனர் காவல்துறையினர்.நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன்பின் கடலூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒப்படைக்கப்பட்டார்.சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இருவருக்கும் 16 வயதில் காதல் கல்யாணம், கைது, சிறை எனச் சிறுவர்களின் வாழ்க்கைபோக்கு திசைமாறி எங்கோ போய்க்கொண்டுள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.