சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் போக்சோவில் கைது

cuddalore old man arrested pocso act

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகில் உள்ளது ஆக்கணூர் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-1 படித்து வரும் 17 வயது மாணவி ஒருவர் தங்களுக்குச் சொந்தமான மாடுகளை ஊருக்கு அருகில் உள்ள கால்வாய் பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தார் அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்(52) என்பவரிடம் அந்த சிறுமி குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார் செல்வராஜ் வீட்டுக்கு அருகில் அழைத்துசென்று தண்ணீர் குடிக்க கொடுத்துள்ளார் மாணவி தண்ணீர் குடித்துவிட்டு திரும்பும்போது அவரை மீண்டும் அழைத்த செல்வராஜ் உனது தாயார் போன் பண்ணுகிறார் வந்து பேசு என அழைத்துள்ளார்.அதை உண்மை என்று நம்பி அவரது வீட்டுக்குள் சென்ற சிறுமியை அடைத்து வைத்து கட்டாய பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதற்கு ஆதாரமாக அதே கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் செல்வராஜ் வீட்டிற்கு கடன் கேட்பதற்காக சென்ற போது செல்வராஜ் வீட்டின் உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருந்தது என்றும் கதவைத் தட்டி செல்வராஜ் அழைத்தும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த வேல்முருகன் ஜன்னல் வழியாக பார்த்ததாகவும்தெரிவித்திருக்கிறார். உடனடியாக வேல்முருகன் சம்பவம் குறித்து சிறுமியின் தாயாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் ராமநத்தம் காவல் நிலையத்தில் செல்வராஜ் மீது புகார் அளித்துள்ளார் அதோடு சிறுமியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ராமநத்தம் போலீசார் விசாரணை செய்து சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக செல்வராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

arrested Cuddalore
இதையும் படியுங்கள்
Subscribe