Advertisment

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்த ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும்! -த.வா.க தொழிற்சங்கம் கோரிக்கை!

CUDDALORE

Advertisment

தமிழக வாழ்வுரிமைக் கட்சி,என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நெய்வேலி இந்திரா நகர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு, சங்கத்தின் சிறப்புத் தலைவரும், கூட்டுறவுச் சங்கத்தின் தலைவருமான இரா.அன்பழகன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் இரா.திருநாவுக்கரசு வரவேற்புரை வழங்கினார். பொருளாளர் சா.முருகவேல், இயக்குனர் க.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், உடனடியாக 750 பேர் பணிநிரந்தரம் செய்தல் மற்றும் பணிமூப்பு பட்டியலில் உள்ள அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் இன்கோசர்வில் சேர்ப்பது, சீனியாரிட்டி பட்டியலில் இடம் பெறாமல் என்.எல்.சி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உழைக்கக் கூடிய அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணிமூப்பு பட்டியலில் இணைத்து 07.08.2020 அன்று போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி அனைத்துச் சலுகைகளும் வழங்குவது,அனைத்து இன்கோசர்வ், ஹவுசிகோஸ், ஒப்பந்தத் தொழிலாளர் அனைவருக்கும் 5 ஆண்டுகளைக் கணக்கிட்டு பதவி உயர்வு (கிரேடு) வழங்குதல், சுரங்கம் மற்றும் ஆலைப்பகுதியில் பணியாற்றும் இன்கோசர்வ் ஹவுசிகோஸ், ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆரம்ப சிகிச்சை முதல் உயர் சிகிச்சை வரை என்.எல்.சி நிர்வாகம் வழங்க வேண்டும்.

Advertisment

நகரப்பகுதி, ஆலைப்பகுதி, சுரங்கப் பகுதி, லான் பகுதி மற்றும் புல்வெட்டும் தொழிலாளர்கள், பயணியர் விடுதி தொழிலாளர்கள் ஆகியோர்களுக்கு ஒப்பந்தத்தில் போடப்பட்ட அனைத்துச் சலுகைகளும் வழங்கல், பணி நிரந்தரம் செய்ய போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி பணிமூப்பு பட்டியலில் இடம் பெற்றிருக்கிற தொழிலாளர்களுக்கு, ஆண்டுக்கு 60% பணி நிரந்தரம் பாதிக்காத வகையில், நிர்வாகம் வழங்குவதாக ஏற்றுக்கொண்ட 40%த்தில் 100% வீடு, நிலம் வழங்கி பாதிக்கப்பட்டவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்,.

Ad

இன்கோசர்வ், ஹவுசிகோஸ், ஒப்பந்தத் தொழிலாளர்கள் விபத்தினாலோ, உடல்நிலை குறைவாலோ இழக்க நேரிட்டால் என்.எல்.சி நிர்வாகம் 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், பணி ஓய்வு பெறும் இன்கோசர்வ், ஹவுசிகோஸ், ஒப்பந்தத் தொழிலாளர் அனைவருக்கும் ஓய்வூதியமாக 5,00,000 (ஐந்து லட்சம்) ரூபாய் வழங்க வேண்டும், இன்கோசர்வ் சங்கத்தின் தலைவராகவும் மற்றும் இயக்குனர்களாவும், 5,000 மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ள என்.எல்.சி வாழ்வுரிமை சங்ஙத்திற்கு என்.எல்.சி நிர்வாகம், அலுவலகம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் சுரங்கம்-2 துணைப் பொறுப்பாளர் பழனி நன்றி கூறினார்.

nlc tvk Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe