/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/654_10.jpg)
என்.எல்.சி. பாய்லர் வெடித்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்கப்படும் என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பேர் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு கேட்டும், நிரந்தர வேலை கேட்டும், இறந்துபோன தொழிலாளர்களின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இரண்டாவது அனல் மின் நிலையம் முன்பு ஷிப்ட்டுக்கு செல்லும் தொழிலாளர்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், தொழிலாளர்கள் வேலைக்கு யாரும் செல்லவில்லை. மேலும் மதியம் 2 மணி ஷிப்டுக்கு, தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து என்.எல்.சி. நிறுவன தலைவர் ராகேஷ்குமார் தலைமையில்,அனைத்து கட்சிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 30 லட்சம் நிவாரணமும், நிரந்தர வேலை வழங்குவதாகவும், தீக்காயமடைந்தவர்களும் 5 லட்சம் நிவாரணம் வழங்குவதாகவும் என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புக்கொண்டதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)