Advertisment

தனியார் வாகனம் மோதியதில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் பலி! 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த நெய்வேலி நகரத்தில் இயங்கும் தனியார் பள்ளியில் 10 - ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் கார்த்திக். இவர் பள்ளி முடிந்ததும் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நெய்வேலி பிளாக் நம்பர் எட்டாவது தெருவில் சென்று கொண்டிருந்த போது, பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த தனியார் வாகனம் கார்த்திக் மீது மோதி, சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டையில் ஏறி நின்றது. இந்த விபத்தில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

cuddalore neyveli private school van collapse 10th student karthik incident

மேலும் தனியார் வாகனத்துக்குள்ளே இருந்த பள்ளி மாணவர்களுக்கு பலத்த அடியுடன் காயங்கள் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெய்வேலி நகர் காவல்துறையினர் பள்ளி மாணவன் கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து நெய்வேலி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகிறது.

Advertisment
Cuddalore district Neyveli Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe