கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி நிறுவனத்தில், கடந்த வியாழக்கிழமை (07.05.2020) மாலை, இரண்டாவது அனல் மின் நிலையத்தின் அலகு 6- இல் நிலக்கரி எரியூட்டும் கொள்கலன் எனப்படும் பாய்லர் வெடித்ததில் நிரந்தர, இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
இதில் நிரந்தர ஊழியர் சர்புதீன் (53) என்பவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 8-ஆம் தேதி உயிரிழந்தார். இன்று மேலும் ஒரு பணியாளர் உயிரிழந்துள்ளார். இந்த இரண்டு தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி என்.எல்.சி 2 ஆவது அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாய்லர் வெடித்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று என்.எல்.சி நிர்வாகம் அறிவித்துள்ளது.