cu

சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த வி.அன்புச்செல்வன் சில நாட்களுக்கு முன்பாக கடலூர் மாவட்ட புதிய ஆட்சியராக பணியிடம் மாற்றப்பட்டார். கடலூரில் மாவட்ட ஆட்சியராக இருந்த வி.பி.தண்டபாணி எழுதுபொருள் அச்சுத்துறைக்கு மாற்றப்பட்டார்.

Advertisment

அதையடுத்து புதிய ஆட்சியரான வி.அன்புச்செல்வன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர், கடலூர் மாவட்டம் அதிக அளவில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கபடுகிற மாவட்டம் என்பதால் அதை நிரந்தரமாய் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட வளர்ச்சி பணிக்கு அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கை மேற்கொள்வேன்" என்று கூறினார்.

Advertisment

அதேசமயம் கடலூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றிய விஜயா பணியிட மாறுதல் செய்யப்பட்டார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி பொது மேலாளர் ராஜகிருபாகரன் கடலூர் மாவட்ட புதிய வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.