Advertisment

இறந்தவரின் உடலை தெப்ப கட்டை மூலம் ஆற்றைக் கடந்து கொண்டுவந்த உறவினர்கள்..! 

cuddalore manimuktharu river nagarathinam passes away

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சொட்டவனம்கிராமத்தினிடையே மணிமுக்தா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் மறுகரையில்வசித்து வந்தவர் 80 வயதுடைய நாகரத்தினம் என்பவர். இவர், உடல்நிலை குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். அதையடுத்து இறந்தவரின் சடலத்திற்கு ஈமச் சடங்கு செய்வதற்காக அவரது மகன்கள், உறவினர்கள் அவரது சொந்தக் கிராமத்திற்கு கொண்டுவர முயற்சி செய்தனர்.

Advertisment

ஆனால், கடந்த சில நாட்களாக விருத்தாசலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பொழிந்ததால் மணிமுக்தாறில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.இதனால், உயிரிழந்த முதியோருக்கு ஈமச் சடங்குகள் செய்வதற்காக அவரது மகன்கள் பொதுமக்கள் உதவியுடன், இருகரையும் தொட்டுக்கொண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள மணிமுக்தாறில், தெப்ப கட்டைகள் கொண்டு இணைக்கப்பட்ட கட்டிலில், இறந்தவரின் உடலைவைத்து ஆற்றைக் கடந்து கிராமத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் முதியோருக்கு இறுதிச்சடங்கு பணிகளைச் செய்தனர்.

Advertisment

Cuddalore manimuktha river
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe