Skip to main content

குடிநீர் குழாயை சரி செய்ய சென்றவர் விபத்தில் பலி!

Published on 25/08/2019 | Edited on 25/08/2019

கடலூர்:  விருத்தாசலம் அருகே குருணை மருந்து கலந்த குடிநீர் குழாயை சரி செய்ய சென்றவர் விபத்தில் பலி. உறவினர்கள் சாலை மறியலால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு! 
 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த புத்தூர் கிராமத்தில் சுமார் 500- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரது வீட்டில், கடந்த 14 ஆம் தேதி  ஊராட்சிக்குட்பட்ட குடிநீர் குழாயில் குருணை மருந்து கலந்ததால், அவரது குழந்தைகள் உட்பட பள்ளி மாணவர்கள்  என பலர் மயக்கம் அடைந்ததால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர், அக்கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் குடிநீர் குழாயை சரி செய்வதற்காக செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சாலை விபத்தில் சிக்கினார்.  

 cuddalore man who went to fix the drinking water pipe accident crisis


அதையடுத்து, அவரை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி கொண்டு சென்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டியனின் உறவினர்கள் அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டுபிடிக்க கோரியும், சாலையில் வேகத்தடை அமைக்கக் கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரியும், விபத்து அதிகமாக நடக்கும் சாலையில் வேகத்தடை அமைக்க கோரியும், விருத்தாச்சலம்- ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலையில் உடலை நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

 cuddalore man who went to fix the drinking water pipe accident crisis


சுமார் மூன்று மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டதால் நான்கு கிலோ மீட்டர் வரை இருபுறங்களிலும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.  இதனால் பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் கலைந்து செல்ல மறுத்தனர். அதன் பின்பு  விருத்தாச்சலம் தாசில்தார் கவியரசு தலைமையில் பாண்டியனின் உறவினர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்த பேச்சுவார்த்தையில் விபத்தை ஏற்படுத்தியவர் மீது உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும், வருங்காலங்களில் இந்த சாலையில் விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதியளித்ததன் பேரில் மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.





 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்