கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் அருண்பிரசாத்(21), அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரராமன் என்பவரின் மகன் குமார்(25).

cuddalore lightening accident

Advertisment

Advertisment

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு கடலூர் அருகே உள்ள சொத்திகுப்பம் முகத்துவாரத்தில் தூண்டில் போட்டு மீன் பிடித்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் செல்போன் பேசிக்கொண்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே 2 பேரும் உயிரிழந்தனர். அங்கிருந்தவர்கள் உடல்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடலூர் துறைமுகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.