Advertisment

புதுமணப்பெண் தற்கொலை...கணவன் மீது பெண் வீட்டார் புகார்!!

கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பாவாடைசாமி, அஞ்சா ஜெயக்கொடி இவர்களின் மகன் பாவேந்தன் என்பவருக்கும் கடலூர் மாவட்டம் சுப உப்பலவாடி கிராமத்தைச் சேர்ந்த சரவணன், சாந்தி இவர்களின் மகள் சபீனா என்பவருக்கும் கடந்த 23.1.2019 திருமணம் நடைபெற்றது.

Advertisment

cuddalore incident

வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டார்கள் வெள்ளி 1 கிலோ, 50 பவுன், ஆடம்பரப் பொருட்கள், ரொக்கப்பணம் 2 லட்சம், இவையெல்லாம் மாப்பிள்ளை வீட்டார் கேட்டதாக தகவல்கள் வெளியாகின. திருமண நாளன்று மாப்பிள்ளை வீட்டார் கேட்ட பொருட்கள் பவுன், வெள்ளி இவையெல்லாம் கொடுத்து விட்டார்கள். அந்த நேரத்தில் வரதட்சணையாக மாப்பிள்ளை விட்டார்கள் கேட்ட 2 லட்சம் பணம் மட்டும் கொடுக்க முடியவில்லை.

திருமணம் நடந்தது 20 நாட்கள் மட்டுமே பாவேந்தன் சபீனா உடன் வாழ்ந்து வந்தார். சில நாட்களில் 2 லட்சம் பணம் கேட்டு தொந்தரவு செய்ய தொடங்கினார். இந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை இரண்டு லட்சம் பணம் கேட்டதை சபீனா அவர் தாயாரிடம் என் கணவர் பணம் கேட்கிறார் என்று சொன்னார். அதற்கு அவரது தாயார் உடனே வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக் கொண்டு போ என்று சபீனா தாயார் கூறியுள்ளார். சபீனா பணம் வாங்குவதற்காக தாயார் வீட்டிற்கு சபீனா வந்த சில நிமிடங்களில் கணவர் பாவேந்தன் சபினாவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இனிமேல் என் வீட்டுக்கு நீ வரக்கூடாது என்று சம்பந்தம் இல்லாமல் பாவேந்தன் பேசினார்.

பாவேந்தன் கைபேசியில் சபீனாவிடம் பேசும் பொழுது சபீனா தாயார் அருகில் இருந்ததால் பேசியதை காதில் வாங்கி உடனே சபீனா குடும்பத்தார்கள் பெரியகுப்பம் பாவேந்தன் வீட்டிற்கு சென்று குடும்பத்தாரிடம் "உங்கள் மகன் என் மகளிடம் தொலைபேசியில் பேசியது சரி தானா என்று கேட்டார்" அதற்கு பாவேந்தன் உறவினர்கள் அதற்கு உரிய பதில் சொல்லாமல். சபீனா குடும்பத்தாரை தரக்குறைவாகவும் ஆபாச வார்த்தைகள் பேசி சபீனா குடும்பத்தாரை பெரியகுப்பம் கிராமத்தை விட்டு விரட்டி அடித்து விட்டார்கள்.

சபினா தாயார் மகளை வாழவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாவேந்தன் மீது புகார் கொடுத்தார்கள். புகாரின் அடிப்படையில் இருதரப்பினரையும் வரவழைத்து ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டார்கள். சபீனா "என் கணவரோடு என்னை சேர்த்து வையுங்கள் என்று கண்ணீர் விட்டு காவல் நிலையத்தில் பாவேந்தன் காலில் விழுந்து கதறினார். ஆனால் பாவேந்தன் " இந்த பெண்ணை எனக்கு பிடிக்கவில்லை எனக்கு விவாகரத்து வாங்கி கொடுங்கள்" என்று கூறினார்.

மீண்டும் ஒரு மாதம் கழிந்து விசாரணை நடந்தது. சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நடைபெற்றது. அந்த மறு விசாரணையில் பாவேந்தன் "நான் நீதிமன்றம் மூலம் நிவாரணம் தேடிக் கொள்கிறேன்" என்று காவல்துறை ஆய்வாளரிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

ஆய்வாளர் அடுத்தகட்டமாக இருவரையும் சேர்க்க முயற்சித்து கடலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலரிடம் பரிந்துரை செய்து உள்ளார். இப்படி இருக்க சபீனா நம் வாழ்க்கை சீரழிந்து விட்டது என்ற எண்ணத்தில் சபீனா தனக்குத் தானே கேள்வி கேட்டபடி சாப்பிடாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார். சபீனா தாயாரும் தினமும் தன் மகள் நிலையைக் கண்டு அழுது கொண்டிருக்கும் காட்சியை பார்த்த சபீனா துயரம் தாங்க முடியாமல் 30.09.2019 மாலை 6 மணி அளவில் எலி மருந்து சாப்பிட்டார்.

கடலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் , அங்கு சிகிச்சை அளிக்க முடியாதபட்சத்தில் மருத்துவர் ஆலோசனைப்படி பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அங்கும் பார்க்க முடியாத நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Advertisment

இந்த நிலையில் தீவிர சிகிச்சை கொடுத்தும் சிகிச்சை பலனின்றி 5.10.2019 மாலை 5.30 மணி அளவில் இவர் உயிர் பிரிந்தது. சபீனா உயிருக்கு காரணமான பாவேந்தன்ணை கைது செய்து தண்டனை பெற்று தருமாறு சபீனா பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் புகார் கொடுத்தனர். இந்த புகார் கடலூர் துணை கண்காணிப்பாளர் திருமதி சாந்தி DSP அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க அனைத்து ஏற்படும் நடந்து கொண்டிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

marriage Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe