சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணைத் தாக்கிய வழக்கில் முன் ஜாமின் கோரி தீட்சிதர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 16-ஆம் தேதி இரவு முக்குருணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்யக் கோரிய பெண்ணை தீட்சிதர் தாக்கிய சம்பவம் இணையதளங்களில் வைரலாகப் பரவியது. இது தொடர்பாக தீட்சிதர் மீது சிதம்பரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் தன்னைக் காவல் துறையினர் கைது செய்யக்கூடும் எனக் கூறி, முன்ஜாமின் கோரி தீட்சிதர் தர்ஷன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/antha penn.jpg)
அந்த மனுவில், கோவில் நடை அடைக்கும் நேரத்தில் வந்து பூஜை செய்ய வேண்டும் என அந்தப் பெண் தகராறு செய்ததாகவும், ஒரு கட்டத்தில் தன்னை நோக்கி கையைத் தூக்கியதால், தான் தற்காப்புக்காகத் தள்ளிவிட்டதாகவும், தனக்கெதிராக போலீசார் பொய் வழக்கு போட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன், மனு வாபஸ் பெறப்பட்டதையடுத்து, தீட்சிதர் தர்ஷன் முன் ஜாமின் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Follow Us