சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 16-ஆம் தேதி இரவு முக்குருணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்யக் கோரிய பெண்ணை தீட்சிதர் தாக்கிய சம்பவம் இணையதளங்களில் வைரலாகப் பரவியது. இது தொடர்பாக தீட்சிதர் மீது சிதம்பரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

Advertisment

cuddalore-incident-women-attacked-by-dikshithar-bail

இதையடுத்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தீட்சிதா் தா்ஷன் தாக்கல் செய்த மனுவில், சம்பவம் நடந்த அன்று பெண் பக்தா் கோயிலின் நடை சாத்தும் நேரத்தில் பூஜை செய்ய வேண்டும் எனக் கோரி தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் என்னைத் தாக்குவதற்காக கையைத் தூக்கினார். எனவே ஒரு தற்காப்புக்காக அவரை தள்ளிவிட்டேன். எனவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

cuddalore-incident-women-attacked-by-dikshithar-bail

Advertisment

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தீட்சிதர் தர்ஷனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது. மேலும் ராமநாதபுரத்தில் 15 நாள் தங்கி காவல்நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என்று உத்திரவிட்டது. இதையடுத்து சனிக்கிழமை சிதம்பரம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கீதா (பொறுப்பு) முன்னிலையில் தீட்சிதர் தர்ஷன் ஆஜரானார். பின்னர் இவருக்கு இரண்டு ஜாமீன்தாரர் பெறப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டது.