cuddalore incident

Advertisment

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வயலூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்துள்ளது. இதனைப் பார்த்த கிராம மக்கள் விருத்தாசலம் காவல் துறையினருக்குத்தகவல் அளித்ததன் பேரில், விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பதும், இவர் மீது கொலை வழக்கு உள்ளது என்பதும் தெரியவந்தது. பின்னர், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

cuddalore incident

இதேபோல், விருத்தாசலம் அடுத்த இருளக்குறிச்சி கிராமத்தில், அடையாளம் தெரியாத இளம்பெண் சடலம் கிடப்பதாக ஆலடி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சென்ற காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை செய்தனர். விசாரணையில் இறந்து கிடந்தவரின் சடலம் இரு தினங்களுக்கு முன்பு காணாமல் போன, அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயதானஇளம்பெண் வான்மதி என்பதுதெரியவந்தது. அதனைத் தொடர்ந்து உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு சென்றனர்.

Advertisment

இவ்விரு சம்பவம் குறித்து காவல்துறையினர் கொலையா? தற்கொலையா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.