கூரையை சேதப்படுத்திய கோழி; தட்டிக்கேட்ட மூதாட்டி மீது தாக்குதல்

cuddalore hen incident 64 years old woman involved 

பக்கத்து வீட்டுக் கோழி தனது வீட்டுக்கூரையை சேதப்படுத்தியதைத்தட்டிக்கேட்ட மூதாட்டி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அணுக்கம்பட்டு என்ற ஊரைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 64). நேற்று முன்தினம் இவரதுபக்கத்து வீட்டைச்சேர்ந்த கஜேந்திரன் என்பவர் வளர்த்து வரும்கோழி ஒன்று முத்துலட்சுமி வீட்டு கூரையின் மீது ஏறி கூரையை கிளறியுள்ளது. இதனால் தனது வீட்டுக்கூரை சேதம் அடைவதாகக் கூறிகஜேந்திரன் குடும்பத்தினரிடம் முத்துலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், கஜேந்திரன் மனைவி சித்ரா மற்றும் அவரது உறவினர்கள் ராஜி, பிரியாஆகியோர் முத்துலட்சுமியிடம் கோழி கூரையில் ஏறி கிளறியதற்கு என்ன செய்ய முடியும் என்று கூறி பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி அவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் முத்துலட்சுமிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்தகுள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Cuddalore police
இதையும் படியுங்கள்
Subscribe