t

Advertisment

கடலூரில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தேதி அறிவிக்க வந்த தேர்தல் அலுவலரை தொழிற்சங்க நிர்வாகிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவியது.

தமிழகத்தில் கடந்தாண்டு கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடந்தது. அதன்படி, கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் உள்ள இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்திற்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தேர்தல் அன்று அ.தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் அ.தி.மு.க நிர்வாகியை சுயேட்சையாக தேர்வு செய்யவேண்டும் எனக்கூறி ஓட்டுப்பெட்டியை துாக்கிச் சென்றதால் தேதி குறிப்பிடாமல் சங்கத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

t

Advertisment

இந்நிலையில் தேர்தல் அலுவலர் புகழேந்தி அம்பிகா சர்க்கரை ஆலை பணியாளர் சங்க அலுவலக அறிவிப்பு பலகையில் சங்க தேர்தல் வரும் 8 ம்தேதி நடக்க உள்ளதாக அறிவிப்பினை ஒட்டுவதற்கு வந்தார். இதையறிந்த தொழிற் சங்க நிர்வாகிகள், தேர்தல் அலுவலர் புகழேந்தியிடம் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அவற்றை தெரியப்படுத்தாமல் சங்கத் தேர்தல் நடத்தக்கூடாது எனவும், சங்க செயலர் பிரபாகரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரை சிறைபிடித்தனர். தகவலறிந்து வந்த, பெண்ணாடம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் இரு தரப்பினரிடமும் சமாதானம் பேசி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.