கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது சுரங்கவிரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்மூலக்குப்பம்கிராமத்தைச் சேர்ந்தகுழந்தைவேல்(வயது 45) என்பவரும் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் சுரங்க விரிவாக்க பணியின் போதுஎதிர்பாராதவிதமாககுழந்தைவேல்மண் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்துபோலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.என்எல்சிசுரங்க விரிவாக்க பணியின்போது ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.