Cuddalore Dt Chidambaram Vijayavani incident

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், மர்மநபர் ஒருவர் முகத்தில் ஸ்பிரே அடித்து கழுத்தில் அணிந்து இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கனகசபை நகர் சுசீலாம்பாள்நகரைச் சேர்ந்த வேலவன் மனைவி விஜயவாணி (57). இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தபால் துறையில் ஹெல்பராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று (07.11.2024) மாலை பணி முடித்து வீட்டிற்குச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரமொட்டை மாடிக்குச் சென்றபோது, அவரின் பின்னால் தொடர்ந்து வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க மர்மநபர் விஜயவாணி முகத்தில் ஸ்பிரே அடித்துள்ளார்.

Advertisment

இதனையடுத்து விஜயவாணி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின், 1/2 பவுன் டாலர் ஆகியவற்றை மர்மநபர் அறுத்துச் சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் எஸ். ரமேஷ்பாபு மற்றும் குற்றப்பிரிவு போலீஸார் சம்பவம் இடத்திற்குச் சென்று சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.