Cuddalore dt Chidambaram Annamalai Nagar police action 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் ரயில்வே மேம்பாலத்திற்குக் கீழே சந்தேகப்படும் படியாக நின்றிருந்த இருவரிடம் அண்ணாமலை நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் இரு சக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் கொண்ட மூட்டை இருப்பதைக் கண்டுபிடித்தனர். இவர்களை அண்ணாமலை நகர் உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் காவல்துறையினர் கஜேந்திரன், ரமணி, மணிகண்டன், ரமேஷ், பாலசுப்பிரமணி ஆகியோர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

இதில் இவர்கள் தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் பாப்பாரப்பட்டி மணியின் மகன் விஜய் (வயது 24), அதேபோல் காட்டுமன்னார்குடி அருகே உள்ள லால்பேட்டை முகமது ஹனிபா மகன் ஹாஜா மொய்தீன் (வயது 25) ஆகிய இருவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பினர். மேலும் இவர்களிடமிருந்து ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான போதை புகையிலை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களைக் கடத்துவதற்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Advertisment

இதே போல் கடந்த மாதம் அண்ணாமலை நகர் காவல்துறையினர் மினி லாரியில் ரகசிய அறை வைத்து பெங்களூரில் இருந்து 1.5 டன் போதை புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டதை கையும் களவுமாகப் பிடித்துச் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்தனர். இதில் தலைமறைவாகப் பெங்களூர் பகுதியில் வசிக்கின்ற விஜய் தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.